இந்தியா Covid-19

வீடு வீடா பீட்சா டெலிவரி செய்த பையனுக்கு கொரோனா..! விபரீதத்தை வீட்டுக்கே வரவைத்த 72 குடும்பங்கள் தனிமை..!

Summary:

Delhi pizza delivery boy corono test positive

டெல்லியில் வீட்டுக்கு வீடு பீட்சா டெலிவரி செய்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதை அடுத்து அவர் பீட்ஸா டெலிவரி செய்த 72 வீடுகள், அவருடன் தொடர்பில் இருந்த மற்ற நபர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் வேகமாக பரவும் கொரோனா வைரஸால் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 12,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பீட்சா டோர் டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் மருத்துவர் ஒருவரை ஆலோசிக்க, அவர் சாதாரண காய்ச்சல், சளிக்கான மருந்துகளை கொடுத்துள்ளார்.

ஆனால் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நபருடன் தொடரில் இருந்த 17 டெலிவரி செய்யும் நபர்கள், அவரிடம் பீட்சா வாங்கிய 72 வீடுகளில் உள்ள நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Advertisement