இந்தியா

குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து.. 7 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்.!

Summary:

குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து.. 7 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்.!

நள்ளிரவு நேரத்தில் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால், 7 பேர் உடல் கருகி பலியான சோகம் நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள வடக்கு டெல்லி, கோகுல்புரியில் குடிசைப்பகுதிகள் உள்ளன. இந்த குடிசைப்பகுதியில் நேற்று நாளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உறங்கிக்கொண்டு இருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் எடுக்க, அடுத்தடுத்து என 30 குடிசைகள் தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement