ரூ.4 கோடி அளவிலான போலி கேன்சர் மருந்து, மாத்திரைகள் தயாரித்த கும்பல் கைது; டெல்லியில் அதிர்ச்சி..! 

ரூ.4 கோடி அளவிலான போலி கேன்சர் மருந்து, மாத்திரைகள் தயாரித்த கும்பல் கைது; டெல்லியில் அதிர்ச்சி..! 



Delhi Cops Arrested Gang Manufacture Fake Cancer Injection and Tablets 

 

டெல்லியில் உள்ள மோதி நகர், டிஎல்எப் கேபிடல் க்ரீன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கும்பல் ஒன்று மர்மமான செயல்களில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து நடத்திய சோதனையில், மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் வெளியானது.

டெல்லியில் செயல்பட்டு வரும் பிரபலமான மருத்துவமனையை சேர்ந்த 2 ஊழியர்கள், போலியாக கேன்சர் மருந்து என அச்சிடப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்து வந்தது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து போலியாக தயாரிக்கப்பட்ட 1.96 இலட்சம் மதிப்புள்ள கேன்சர் ஊசிகள், ரூ.89 இலட்சம் மதிப்புள்ள ரொக்கம், 18 ஆயிரம் மதிப்புள்ள டாலர் என மொத்தமாக ரூ.4 கோடி மதிப்புள்ள கேன்சர் மருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும், 7 சர்வதேச அளவிலான, 2 இந்திய அளவிலான மருந்து நிறுவனங்கள் பெயரில் உருவாக்கப்பட்ட போலி தயாரிப்புகள் கைப்பற்றப்பட்டன. இக்கும்பலை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் பேரில் கூடுதலாக 8 இடங்களிலும் சோதனை நடத்தினர். கைதாகிய நபர்களுக்கு சர்வதேச அளவிலான கடத்தல் கும்பலுடனும் தொடர்பு இருந்துள்ளது. இதனால் தீவிர விசாரணை தொடருகிறது.