Breaking: கொரோனாவால் சற்றுமுன் ஒருவர் பலி.. இந்தியாவில் 7 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை..!



Death in Gujarat due to coronavirus confirmed

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  பாட்னாவை சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் இன்று உயிர் இழந்த நிலையில் தற்போது 69 வயது கொண்ட ஒருவர் சூரத் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பலி 7 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

corono

இருப்பினும் வைரஸ் தோற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கடந்த நான்கு நாட்களாக குஜராத் மாநிலம் சூரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 69 வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிர் இழந்துள்ளார். இதன்மூலம் கொரோனோவால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை இந்தியாவில் 7 ஆக உயர்ந்துள்ளது.