முப்படை தளபதி பிபின் ராவத், மதுலிகா ராவத் உடல்களுக்கு மகள்கள் கண்ணீர் அஞ்சலி.!

முப்படை தளபதி பிபின் ராவத், மதுலிகா ராவத் உடல்களுக்கு மகள்கள் கண்ணீர் அஞ்சலி.!


Daughters tearful tribute to the bodies of Bipin Rawat and Madhulika Rawat

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத்தின் மறைவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகளுக்குத் திருமணமாகிவிட்டது. இன்னொருவர் படித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் தனி தனி ஆம்புலன்சில் சூலூர் விமானப்படைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் ரணுவ விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் ராணுவ மரியாதையுடன் அவர்களின் உடல்களை டெல்லியில் உள்ள பாலம் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுச்சென்றனர்.

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ வீரர்கள் ஆகியோரின் உடல்களும் இறுதி அஞ்சலிக்கா வைக்கப்பட்டன. தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களது இரு மகள்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.