மாமனாரை துடிதுடிக்க அடித்து கொன்ற மருமகள் குடும்பத்தினர்.! நடந்தது என்ன?? அதிரவைக்கும் சம்பவம்!!

மாமனாரை துடிதுடிக்க அடித்து கொன்ற மருமகள் குடும்பத்தினர்.! நடந்தது என்ன?? அதிரவைக்கும் சம்பவம்!!


daughter-in-law-family-attack-and-killed-father-in-law

அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் படோடி பகுதியில் வசித்து வருபவர் 55 வயது நிறைந்த சுரேஷ் குமார். இவரது மனைவி சாவித்ரி. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் ராஜேந்திரனுக்கு பபிதா என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேந்திரனுக்கும், பபிதாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் பபிதா கோபித்துகொண்டு  குழந்தையுடன் அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குடும்பத்தினர் அனைவரிடமும் கணவருடன் நடந்த பிரச்சினை குறித்தும் கூறியுள்ளார். இந்நிலையில், பபிதாவின் தந்தை மற்றும் சகோதரர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் நேற்று பபிதாவின் மாமனார் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

dead

வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்கள் மாமனார் சுரேஷை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் தடுக்க முயன்ற சாவித்ரி மற்றும் மகளையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இந்நிலையில் அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்த நிலையில் 5 பேரும் தப்பித்து சென்றுள்ளனர்.

பின்னர் படுகாயமடைந்த சுரேஷ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.