"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
கொடுமையிலும் கொடுமை.. ஆசிரியர் பலகையால் அடித்ததில் யுகேஜி சிறுவன் மரணம்.. போலீஸ் விசாரணை..!
ஹைதராபாத்தை சேர்ந்த ஹேமந்த் என்ற சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளார். இவர் வழக்கம்போல் இன்று பள்ளி சென்றுள்ளார். அப்போது ஹேமந்தின் ஆசிரியர் வீட்டுப்பாடம் செய்யாததால் அவரை கடுமையாகத் திட்டியதாக சொல்லப்படுகிறது.
மேலும் அங்கிருந்த பலகையால் ஆசிரியர் ஹேமந்தின் தலையில் அடித்துள்ளார். இதனால் சிறுவன் ஹேமந்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் மயங்கி விழுவதைக் கண்டு பதறிப் போன சக ஆசிரியர்கள் ஹேமந்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் சிறுவன் ஹேமந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியர் அடித்ததில் மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.