ஒருவேளை பேஷன் ஷோவிற்கு ரெடியாகுதோ.! ஒய்யார நடைப்போட்ட காகம்.! ரசிக்கவைக்கும் வீடியோ!!crow-walking-like-fashion-show-model-video-viral

சமூக வலைதளங்களில் பல வித்தியாசமான வீடியோக்கள் அவ்வப்போது வெளிவந்து வைரலாவது வழக்கம். அதிலும் பறவைகள், விலங்குகள் போன்ற உயிரினங்களின் வினோத வீடியோக்கள் வைரலாகி பார்ப்போரை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பது மட்டுமின்றி, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

இந்த நிலையில் தற்போது காகம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காகம் ஒன்று பார்ப்போர் ரசிக்கும் வகையில் ஒய்யாரமாக நடைபோட்டுள்ளது.

அதாவது காகம் ஒன்று சுவரில் மிகவும் ஸ்டைலாக மாடல் அழகிகளை போல ஒய்யாரமாக நடைபோட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள், காகம் ஃபேஷன் ஷோவிற்கு தயாராகுவது போல இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.