அடி ஆத்தீ.... கரை ஏறிய முதலைக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து பூஜை செய்த அர்ச்சகர்! அலறி அடித்து ஓடிய பக்தர்கள்... பகீர் காட்சி!!!



crocodile-krishna-river-temple-priest-puja

தெலங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற பீச்சுப்பள்ளி புஷ்கர் படித்துறையில் கிருஷ்ணா நதியில் இருந்து திடீரென முதலை ஒன்று கரையேறியது. இதைப் பார்த்த பக்தர்களும் பொதுமக்களும் அச்சத்தில் விலகி நின்றனர். ஆனால், அங்கிருந்த கோயில் அர்ச்சகர் ஒருவர் மட்டும் அச்சமின்றி முதலையின் அருகே சென்றார்.

முதலைக்கு பொட்டு வைத்து பூஜை செய்த அர்ச்சகர்

முதலையை தெய்வத்தின் அம்சமாக கருதிய அந்த அர்ச்சகர், அதன் நெற்றியில் பொட்டு வைத்து மலர்களைத் தூவினார். தொடர்ந்து ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜையும் செய்தார். பொதுவாக ஆபத்தான விலங்காக கருதப்படும் முதலை, அர்ச்சகர் பூஜை செய்த சில நிமிடங்களிலும் எந்தவித ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தாமல் ஒரே இடத்தில் அமைதியாக இருந்தது.

இதையும் படிங்க: படுக்கை முழுக்க பணத்தில் படுத்து உருண்ட பல்லவி சிங்! சிக்கியது எப்படி? இறுதியில் நடந்த பெரிய ட்விஸ்ட்... பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மை!!!

அச்சத்தில் பக்தர்கள்; வியப்பில் பார்த்த பொதுமக்கள்

படித்துறையில் முதலை இருப்பதை அறிந்த பக்தர்கள் சற்று தொலைவில் நின்றபடி காட்சியை பார்த்தனர். அர்ச்சகர் அதன் அருகே சென்று பூஜை செய்தது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கிருஷ்ணா நதியில் இருந்து முதலை கரையேறியதற்கான காரணம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

இந்தக் காட்சியை படித்துறையில் இருந்த சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அது சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், தற்போது வைரலாகி வருகிறது. பீச்சுப்பள்ளி முதலை தொடர்பான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அர்ச்சகரின் துணிச்சலையும் பூஜையின்போது முதலையின் அமைதியான நடத்தையையும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

ஆபத்தான விலங்கு என்பதால் இதுபோன்ற சூழலில் பொதுமக்கள் பாதுகாப்பான தொலைவில் இருப்பது அவசியம். அதே நேரத்தில், கிருஷ்ணா நதி முதலை குறித்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: என்ன ஒரு பித்தலாட்டம்... 20 வருஷமா வங்கி லாக்கருக்கு கட்டின வாடகை! ஆனா... வங்கி லாக்கரைத் திறந்த பெண்ணுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..! பகீர் மோசடி..!!!