நாயை கொடுமை படுத்திய நபர்!! ஓடிவந்த பசுமாடு..!! அடுத்து என்ன நடந்தது என்பதை பாருங்க..



Cow save a dog from man viral video

நாய் ஒன்றினை பசுமாடு காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசாந்தா நந்தா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் 15 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோ காட்சியில் நபர் ஒருவர் நாய் ஒன்றின் இரண்டு காதுகளையும் பிடித்து, அதனை மேலே தூக்கி கொடுமை படுத்துகிறார்.

இதனை பார்க்கும் பசுமாடு ஒன்று, அங்கு வேகமாக ஓடிவந்து, அந்த நபரை முட்டி கீழே தள்ளி அந்த நாயை அவரிடம் இருந்து காப்பாற்றுகிறது. வாயில்லா விலங்குகளுக்கு விலங்குகளே துணை என்பது போல் இந்த வீடியோ உள்ளது.

"கர்மா" என்ற தலைப்புடன் சுசாந்தா நந்தா அவர்கள் பகிர்ந்துள்ள இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகிவருகிறது.