எனக்கே ஸ்கெட்ச்சா?? மருமகளை கட்டிப்பிடித்து மாமியார் செய்த காரியம்!! சதியில் சிக்கிய மருமகள்...!
எனக்கே ஸ்கெட்ச்சா?? மருமகளை கட்டிப்பிடித்து மாமியார் செய்த காரியம்!! சதியில் சிக்கிய மருமகள்...!

மருமகளுக்கு வேண்டுமென்ற கொரோனாவை பரப்பிய மாமியாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம், ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரை அவரது சகோதரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அந்த பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அந்த பெண்ணிடம் கொரோனா எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த பெண் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆம், அந்த இளம் பெண்ணின் மாமியார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இதனால் அவர் அருகில் யாரும் செல்லவில்லை. பேரக்குழந்தைகளும் அவர் அருகில் செல்லாததால் அந்த பெண்ணின் மாமியார் கடும் விரக்திக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் நான் இங்கு தனியாக இருக்கேன், நீங்கெல்லாம் சந்தோசமா இருக்கீங்களா என கூறிக்கொண்டே அந்த பெண்ணின் மாமியார் எழுந்துவந்து அந்த பெண்ணை கட்டிப்பிடித்து கொரானாவை பரப்பியதாகவும், அதன்பின்னர் தன்னை வீட்டை விட்டு துரத்திவிட்டதால் நான் எனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டேன் எனவும் அந்த பெண் கூறியுள்ளார்.