இந்தியா

6 வயது சிறுமியை கடத்தி சீரழித்து கொன்ற மனிதமிருகம்! உலகையே உலுக்கிய சம்பவத்தில் நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

Summary:

court annoumce dead punishment to rabist

ஆந்திர மாநிலம் சித்தூரில், குரும்பலகொட்டாவில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் கடந்த நவம்பர் மாதம் திருமணம் ஒன்று  நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்திற்கு 27 வயது நிறைந்த முகமது ரபி  என்பவர் வருகை தந்திருந்தார். அவர் லாரி கிளீனராக இருந்துள்ளார்.

இந்நிலையில் முகமது ரபி திருமணத்திற்கு வந்த ஆறு வயது சிறுமி ஒருவருக்கு சாப்பிட தின்பண்டங்களை வாங்கி கொடுத்து அவரை அங்கிருந்து கடத்தி சென்றுள்ளார்.பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிருகத்தனமாக அவரை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து அங்கிருந்த சாக்கடை கால்வாயில் சிறுமியின் சடலத்தை வீசிவிட்டு ஒன்றும் நடக்காதது போல அங்கிருந்து தப்பித்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்பொழுது முகமது ரபி சிறுமியை அங்கிருந்து கடத்தி செல்வது பதிவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுதலைமறைவாக இருந்த முகமது ரபியை கைது செய்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான வழக்கு சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது காமக்கொடூர குற்றவாளியான முகமது ரபிக்கு மரண தண்டனை அதாவது தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 


Advertisement