நாளை ஏப்ரல் ஒன்னு..! முட்டாள்கள் தினம்.! மக்களை முட்டாளாக்கினால்.? எச்சரிக்கும் மகாராஷ்டிர அரசு.!

நாளை ஏப்ரல் ஒன்னு..! முட்டாள்கள் தினம்.! மக்களை முட்டாளாக்கினால்.? எச்சரிக்கும் மகாராஷ்டிர அரசு.!



Corono virus april one foolish day warning

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையியல், நாளை ஏப்ரல் 1 என்பதால் பொய்யான தகவல்களை பரப்பி மக்களை அச்சமடைய செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் எச்சரித்துள்ளார்.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அணைத்து நாடுகளிலும் வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நம் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

corono

இந்நிலையில், ஏப்ரல் ஒன்னு அன்று பொய்யான தகவல்களை கூறி உறவினர்கள், நண்பர்களை முட்டாளாக்குவது வழக்கம். இந்நிலையில் நாளை ஏப்ரல் ஒன்னு என்பதால் ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதியில் இருக்கும் மக்கள் மத்தியில், வைரஸ் தொடர்பான பொய்யான தகவல்களை பரப்பி, அவர்களை மேலும் அச்சமடையவைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே, முட்டாள் தினம் என்ற பெயரில் தவறான தகவல்களைப் பரப்பி மக்களை ஏமாற்றினால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால்  இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்.