இந்தியா

சற்றுமுன்: கொரோனாவால் இந்தியாவில் மேலும் ஒருவர் பலி..! இறப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு.

Summary:

Corono 8th death registered in Kolkata

இந்தியாவில் கொரோனோவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை 7 ஆக இருந்த பலி எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 400 கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுளனர். கொரோனாவை கட்டுப்படுத்த இந்த அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 55 வயதான நபர் கொரோனாவால் இன்று உயிர் இழந்துள்ளார். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பலி 8 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement