கொரோனாவால் உயிர் இழந்தால் 4 லட்சம் இழப்பீடு..! மருத்துவ செலவையும் அரசே ஏற்கும்.! தேசிய பேரிடராக அறிவித்த மத்திய அரசு.!
கொரோனாவால் உயிர் இழந்தால் 4 லட்சம் இழப்பீடு..! மருத்துவ செலவையும் அரசே ஏற்கும்.! தேசிய பேரிடராக அறிவித்த மத்திய அரசு.!

கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்து, கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு 4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது மத்திய அரசு.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 100 கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்தியாவில் இதுவரை 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவரை 2 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
மேலும், கொரோனாவால் உயிர் இழந்தால் அந்த குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும், கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவ செலவை அந்தந்த மாநில அரசே ஏற்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.