
corona Vaccine next level
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தியாவிலும் இதற்கான முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த மருந்து விலங்குகளிடையே வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதால், மனிதர்களிடையே பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்தது.
ஏற்கனவே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் கொரோனா தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு உள்ளது. உலகில் வேறு சில நிறுவனங்களும் இதேபோல் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து சோதனை செய்து வருகிறது.
இந்த நிலையில், ஜைடஸ் கடிலா என்ற நிறுவனமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு மருந்துக்கும் மனிதர்களிடையே முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இதுவரை உலக அளவில் 17 தடுப்பு மருந்துகள் மனிதர்களிடையே பரிசோதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement