ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும்?



corona vaccination in india

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற சூழ்நிலையில் உலகளவில் கொரோனா தடுப்பூசியை (Corona Vaccine) கண்டுபிடிக்க வேண்டும் என விரைவான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. 

coronaஇந்நிலையில் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்ட்டுடன் மில்லியன் கணக்கான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் ஆகியுள்ளது. இந்த மருந்தை இந்தியாவில் பரிசோதித்து பார்க்கும் நடவடிக்கை ஒரு வாரத்திற்குள் தொடங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தி துவங்க உள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் என தோராயமாக எதிர்பார்க்கப்படுகிறது.