இந்தியா மருத்துவம்

கொரோனா நோயை கட்டுப்படுத்த புதிய சிகிச்சை! இந்திய மருத்துவர் சாதனை!

Summary:

Corona treatment

சீனாவில் ஆரம்பித்த கொரோனோ இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பெரும் அச்சுறுத்தலில் உள்ளனர்.


கொரோனா அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தபட்டு வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர் மக்கள். கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுதைத் தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறது.


உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், பெங்களூரில் உள்ள ஒரு டாக்டர் கொரோனாவுக்கு ஒரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக ஊசி மூலம் வழங்கக்கூடிய சைட்டோகைன்களை நாங்கள் தயாரித்துள்ளோம். மேலும் நாங்கள் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். இதன் முதல் தொகுப்பு இந்த வார இறுதிக்குள் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.


Advertisement