மீண்டும் முழு ஊரடங்கா.? வேகமெடுக்கும் கொரோனா பரவல்.! முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!

மீண்டும் முழு ஊரடங்கா.? வேகமெடுக்கும் கொரோனா பரவல்.! முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!



corona reduced in india

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அசுர வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. 

அதேபோல் கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும்  630- பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அதிகரிக்கும் கொரோனா பரவல் முதல் அலையைப்போல இல்லாமல் மிக வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

corona

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.