இந்தியா மருத்துவம் Covid-19

இவ்வளவு கொடுமையானதா இந்த கொரோனா!! பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே வைரஸ் பரவும்.. மத்திய அரசு தகவல்..

Summary:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே மற்றவர்களுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளதாக மத்திய

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே மற்றவர்களுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பாதித்தவர்கள் தும்மினாலோ அல்லது இருமினாலோ அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் பேசினாலே பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மிய பின் அல்லது இருமிய பின் அவரது எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் பரவி, அதை சுவாசிப்பவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பேசும் போதும் அவரிடம் இருந்து வெளிப்படும் எச்சிலின் பெரிய துகள்கள் காற்றில் பரவி, அதனை ஒருவர் தொட்டு, தனது மூக்கிலோ அல்லது கண்களையோ தொடும்போது கொரோனா வைரஸ் அவர்களையும் தாக்கும் என எச்சரித்துள்ளது மத்திய அரசு.


Advertisement