இந்தியா Covid-19

இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா பாதிப்பு! பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 97,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மேலும் 1,132 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,198 ஆக உயர்ந்தது.

 கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 82,719 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதித்து குணமடைதோர் எண்ணிக்கை 40,25,079 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,09,976 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement