இந்தியா Covid-19

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! இன்று ஒருநாள் மட்டும் 1,181 பேர் உயிரிழப்பு.!

Summary:

corona increased in india

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 34,159,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் 1,018,791 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 25,430,448 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,12,585 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1,181 பேர் உயிரிழந்துள்ளனர். பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98,678 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement