இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது!


corona-increased-in-india-8PBY3N

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 29, 429 ஆக உயர்ந்து 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 20,572 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 9,06,752 லிருந்து 9,36,181 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 582 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,727 லிருந்து 24,309 ஆக உயர்ந்து உள்ளது.  

corona

 குணமடைந்தோர் எண்ணிக்கை 5,71,460 லிருந்து 5,92,032 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிமாக பதிவாகியுள்ள முதல் 5 மாநிலங்களில் மகாராஷ்டிரா (6,741), தமிழகம் (4,526), கர்நாடகா (2,496), ஆந்திர பிரதேசம் (1,916) டெல்லி (1,606) உள்ளன.