இந்தியா மருத்துவம்

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 537 ஆக உயர்வு! தமிழர்கள் வசிக்கும் தாராவியில் பரவினால் கட்டுபடுத்த முடியாது எச்சரிக்கை!

Summary:

corona in mumbai

மகாராஷ்டிராவில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 537-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மட்டும் அதிகபட்சமாக 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தானே மாவட்டத்தில் 25 பேரும், புனேயில் 11 பேரும், அகமதுநகரில் 3 பேரும், வாஷிம், ரத்னகிரியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா நோாயாளிகள் அதிகம் உருவாகக்கூடிய வாய்ப்புள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மும்பை, புனே, நாக்பூர் ஆகியவற்றில் ஆய்வு செய்ய பல குழுக்களை மாநில அரசு அமைத்துள்ளது.

சுமார் 10 லட்சம்  மக்கள் வசிக்கும் தாராவி அதிகப்படியான மக்கள் தொகையை கொண்டுள்ளது. அப்பகுதியில் சமூக இடைவெளி உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமற்றதாக ஆக்குகிறது. இந்தநிலையில், அப்பகுதியில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவினால் நிலைமையை நிர்வகிக்க முடியாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
 


Advertisement