ஒரே நாளில் கொத்து கொத்தாக குணமடையும் கொரோனா நோயாளிகள்..! நல்ல செய்தி கூறிய மத்திய சுகாதாரத்துறை.!

ஒரே நாளில் கொத்து கொத்தாக குணமடையும் கொரோனா நோயாளிகள்..! நல்ல செய்தி கூறிய மத்திய சுகாதாரத்துறை.!



Corona discharge cases increased in India latest Report

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 94 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்த பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை உலக அளவில் 3 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரத்து 925 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் தற்போது வரை 9 லட்சத்து 62 ஆயிரத்து 480 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 54 லட்சத்து 17 ஆயிரத்து 274 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona

இந்தியாவில் தற்போது வரை 86 ஆயிரத்து 909 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்தாலும் தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் ஒருபுறம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 94 ஆயிரத்து 612 நோயாளிகள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைபவர்களின் விகிதம் 79.68 சதவீதமாக உள்ளது.