இந்தியா Covid-19

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா! நேற்று ஒரு நாள் மட்டும் பலி எண்ணிக்கை எவ்வளவு? வெளியான அதிர்ச்சித் தகவல்!

Summary:

Corona death increased in india

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் பரவி வந்த இந்த வைரஸ் ஆனது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பரவிய சில நாட்களில் இருந்தே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவிற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் உலகின் பல நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுதல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்திய சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்றுவரை 1,373 ஆக உயர்வடைந்து இருந்தது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்து 533 ஆக உயர்வடைந்தது. இந்த நிலையில், இந்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 195 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,373ல் இருந்து 1,568 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்துள்ளது.


Advertisement