அரசியல் தமிழகம் இந்தியா

தூக்கி வீசப்பட்ட திருநாவுக்கரசர்! தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அதிரடி மாற்றம்!

Summary:

Congress tamilnadu president changed

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து திருநாவுக்கரசர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் KS அழகிரி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திடீரென இந்த அறிவுப்பு வெளியாகியுள்ளது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றப்பட்டுள்ளார். தேசிய காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது திருநாவுக்கரசர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக KS அழகிரி நியமிக்கப்ட்டுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டுமுறை MLA வாகவும், ஒரு முறை எம்.பி யாகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் H . வசந்தகுமார், K . ஜெயக்குமார், M . K . விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் செயல்தலைவர்களா நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும் சிறப்பான முறையில் செயல்பட்டதாக முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Advertisement