"ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு; ஆலையை இயக்க அனுமதிக்கலாம்" என ஆய்வு குழு பரிந்துரை

"ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு; ஆலையை இயக்க அனுமதிக்கலாம்" என ஆய்வு குழு பரிந்துரை



closing-sterlite-is-not-right

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனதை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆலைக்கு சீல்வைக்கப்பட்டதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுதாக்கல் செய்ததையடுத்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

Tuticorin sterlite

ஆலையை ஆய்வு செய்ய மேகாலய உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையைக் கொண்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Tuticorin sterlite

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு எனவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்கலாம் எனவும் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.