இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா.! என்ன காரணம்.?

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா.! என்ன காரணம்.?



china warning to india


அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. 

சீனாவில் உள்ள ஆய்வுக்கூடத்தில்தான் கொரோனா தோற்று உற்பத்தி செய்யப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதை சீனா மறுத்தது. இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தநிலையில், லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதத்தில் இருந்து மோதல் ஏற்பட்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால் டிரம்பின் கோரிக்கையை ஏற்க இந்தியாவும், சீனாவும் மறுப்பு தெரிவித்தது.

china

அமெரிக்காவுடன் இந்தியா நல்லுறவுடன் இருப்பதும், இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் அமெரிக்கா இருப்பதும் சீனாவுக்கு பிடிக்கவில்லை. இதனால், அமெரிக்கா-சீனா மோதல் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய பனிப்போரில் சீனாவைத் தாக்கும் ஒரு அமெரிக்க சிப்பாயாக இந்தியா மாறக்கூடாது, இல்லையெனில் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரையாக வெளியாகி உள்ளது.