வாணி போஜனா இது.. சேலையில் குடும்ப குத்து விளக்காக ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை.!
சிடுமூஞ்சி நண்பர்.. சும்மா சும்மா திட்டாதே. ஆத்திரமடைந்த சக நண்பர்களின் வெறிசெயல்..!
சிடுமூஞ்சி நண்பர்.. சும்மா சும்மா திட்டாதே. ஆத்திரமடைந்த சக நண்பர்களின் வெறிசெயல்..!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லட்சுமன் மஞ்சி, ஜக்குதேவ், சந்தனகுமார் ஆகிய மூவரும் பெங்களூரு பகுதியில் உள்ள பைரதியில் தங்கி வேலை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் லட்சுமணன் மஞ்சி சிறு சிறு விஷயங்களுக்கு கூட முகம் சுளிப்பதும், கோபப்பட்டு மற்ற இரண்டு நண்பர்களை திட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
மேலும் சம்பவத்தன்று லட்சுமணன் தன்னுடன் இருந்த மற்ற நண்பர்களை கடுமையாக திட்டி உள்ளார். பின்பு வெளியே சென்ற லட்சுமணன் வீட்டிற்கு திரும்பும்போது குடிபோதையில் வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மற்ற இரண்டு நண்பர்கள் லட்சுமணனை பக்கத்தில் இருந்த ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று கீழே தள்ளி அவர் மீது கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து லட்சுமணன் மஞ்சி கொலை செய்து கிடப்பதை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் லட்சுமணன் மஞ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பந்தமாக போலிசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருடன் தங்கியிருந்த ஜக்தேவ் மற்றும் சந்தனகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து லட்சுமணன் மஞ்சியை கொலை செய்துவிட்டு ஜார்கண்ட் தப்பி செல்ல ரயில் நிலையம் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.