போதை மாத்திரை விற்பனை செய்த இளம் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது.. கோயம்பேடு தனியார் மால் அருகே பகீர்..!chennai-drug-sales-3-arrested-by-police

சென்னை கோயம்பேட்டில் உள்ள வி.ஆர் மாலில் மடிப்பாக்கம் எஞ்சினியர் பிரவீன் என்பவர் அதிகளவு மதுபானத்தை உட்கொண்டு, அனுமதியின்றி நடந்த பார்ட்டியில் கலந்துகொண்டு உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பான விசாரணையில் மதுவிலக்கு காவல் துறையினர் போதை விருந்தை ஏற்பாடு செய்து நடத்தியதாக 6 பேரினை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், இதே வணிக வளாகம் அருகே வாலிபர் போதை மாத்திரை விற்பனை செய்து வருவதாக திருமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ய, அவர் அயனாவரத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரின் தகவலின் பேரில் சாகுல் அமீது (வயது 21), கோடம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் டோக்கஸ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் மூவரும் போதை மாத்திரை மற்றும் போதை ஸ்டாம்ப்பை ஆன்லைன் மற்றும் வாட்சப் குழு மூலமாக ஆர்டர் எடுத்து டோர் டெலிவரி செய்ததும் தெரியவந்தது. இவர்களில் டொக்கஸ் கல்லூரி மாணவி ஆவார். இவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.