தரையிறங்க போகும் சந்திரயான்-3! மொத்த உலகநாடுகளின் பார்வையும் நாளை இந்தியா பக்கம்தான்!

தரையிறங்க போகும் சந்திரயான்-3! மொத்த உலகநாடுகளின் பார்வையும் நாளை இந்தியா பக்கம்தான்!



chandarayaan---3-tomorrow-landing-in-moon

ந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நாளை தரை இறங்குகிறது. 

நிலவை ஆராய்ச்சி செய்ய ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னிலையில் இருந்த நிலையில், இந்தியா சந்திரயான்-1 என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி, நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. 

அதற்கு அடுத்தகட்டமாக, நிலவின் தென்துருவத்தில், இதுவரை யாரும் ஆய்வு செய்யாத இடத்தில் தடம் பதிக்க சந்திரயான்-2 என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது.  ஆனால் சந்திரயான்-2 தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதியதால், இத்திட்டம் தோல்வியடைந்தது. 

Chandrayaan 3

இதையடுத்து இரண்டாம் முயற்சியாக, சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவும் லூனா 25 என்ற விண்கலத்தை நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்க அனுப்பியது. இந்த லூனா-25, இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3க்கு முன்பாகவே தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அவ்வாறு தரையிறங்கினால், நிலவின் தென்துருவ பகுதியில் முதலில் இறங்கிய நாடு என்ற பெருமையை அந்நாடு பெறும். இத்தகைய சூழலில் தான் லூனா-25 தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவில் மோதி நொறுங்கியது என ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் உறுதி செய்துள்ளது. இதனால் சந்திரயான்-3 விண்கலத்தின் எதிர்பார்ப்பும் உலக நாடுகளுக்கிடையே அதிகரித்துள்ளது.