மீண்டும் விபத்து பரபரப்பு... நூலிழையில் தப்பிய மத்திய அமைச்சர் மற்றும் பயணிகள்.!

மீண்டும் விபத்து பரபரப்பு... நூலிழையில் தப்பிய மத்திய அமைச்சர் மற்றும் பயணிகள்.!



central-petroleum-minister-and-passengers-saved-by-the

இந்திய தலைநகரான டெல்லியில் இருந்து  அசாம் மாநிலத்தின் திப்ரூக்கர் நகருக்கு  புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறின் காரணமாக  கௌஹாத்தி விமான நிலையத்தில் தரையிறங்க அந்த விமானம் திருப்பி விடப்பட்டது . இதன் காரணமாக அந்த விமானத்தில் இருந்த 150 பயணிகளும் உயிர் தப்பினர்.

நாட்டையே உலுக்கிய பயங்கர ரயில் விபத்து நேற்று நடைபெற்ற நிலையில்  இன்று  டெல்லியில் இருந்து அசாம் மாநிலத்திற்கு புறப்பட்ட விமானம் ஒன்றில் இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி விமான கட்டுப்பாட்டறைக்கு தெரிவித்தார். இதற்கு உடனடியாக பதிலளித்த விமான கட்டுப்பாட்டு அறையினர் கௌகாத்தி விமான நிலையத்தில் தரையிறக்குமாறு கட்டளையிட்டனர்.

flightemerencylanding

இதனைத் தொடர்ந்து சாதுரியமாக செயல்பட்ட விமானி உடனடியாக விமானத்தை அங்கு தரையிறக்கினார் இதன் காரணமாக விமானத்தில் பயணம் செய்த  மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ரமேஷ் டெலி  இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களுடன் பயணம் செய்த பயணிகள் என  150 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விமானத்தில் சாதுரியமாக செயல்பட்ட விமானியை அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். நாட்டையே உலுக்கிய ஒரு கோரச் சம்பவத்தின் சோகங்கள் இன்னும் முடியாத நிலையில் அடுத்து ஏற்பட இருந்த மிகப் பெரிய விபத்து  விமானியின் சாதுரியத்தால் தடுக்கப்பட்டிருக்கிறது.