#Breaking: சிபிஎஸ்இ 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி அறிவிப்பு: விபரம் உள்ளே.!

#Breaking: சிபிஎஸ்இ 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி அறிவிப்பு: விபரம் உள்ளே.!



cbse-10th-12th-exam-notification

மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, பிப்ரவரி மாதம் 15ம் தேதி தேர்வுகள் தொடங்கி, ஏப்ரல் 02ம் தேதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 15ம் தேதி தேர்வுகள் தொடங்கி, மார்ச் மாதம் 13ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அறிவிப்பு விபரம்:

அதன்படி, தேர்வுகள் காலை 10:30 மணிக்கு தொடங்கி 12:30 மணியளவில் நிறைவு பெறுகின்றன. காலை 9 மணிக்கு மேல் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

சோதனைகள் நிறைவு பெற்று 09:45 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு, 10 மணிக்கு விடைத்தாள் மற்றும் வினாத்தாள் ஆகியவை வழங்கப்படும். 10:30 மணியளவில் மாணவர்கள் தங்களது விடைத்தாள்களில் பதில்களை நிரப்பலாம்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அறிவிப்பு விபரம்: