இந்தியா

பிரேக்கிங்: காபி டே உரிமையாளர் சித்தார்தாவின் உடலை மீட்கும் வீடியோ வெளியானது!

Summary:

Cafe coffee day owner sidhartha body fond video

இந்திய அளவில் மிகப்பெரிய நிறுவனமான காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா காணாமல் போனதாக தகவல்கள் பரவியது. அதன்பின்னர் நேத்ரா ஆற்றின் அருகே சென்றபோது சித்தார்த்தா காரில் இருந்து இறங்கியதாகவும், பின்னர் அவர் மாயமானதாகவும் அவரின் கார் ஓட்டுநர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தீவிர தேடுதல் வேட்டையில் மீட்டுப்பு பணியினர் ஈடுபட்டதை அடுத்து தொழில் ஏற்பட்ட நஷ்டத்தினால் தற்கொலை செய்துகொள்வதாக சித்தார்த்தா எழுதிய கடிதம் ஓன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி ஆக்கியது. இருப்பினும் கடிதத்தின் உண்மை நிலை புரியாததால் சித்தார்த்தா என்ன ஆனார் என தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போன சித்தார்தாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை கர்நாடக மாநிலம் தக்ஷின மாவட்டத்தின் துணை ஆணையர் சசிகாந்த் செந்தில் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து சித்தார்தாவின் உடலை மீட்கும் வீடியோ ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ. 


Advertisement