கார் மீது அமர்ந்தபடி வலம் வந்த மணப்பெண்!! வைரலான வீடியோ!! மறுநாளே காத்திருந்த அதிர்ச்சி!!



Bride sits on car bonnet for her entry

முகக்கவசம் அணியாமல் காரில் வலம்வந்து போட்டோ ஷூட் நடத்திய மணப்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் என்றால்கூட அதற்கும் பல்வேறு விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. குறிப்பாக திருமணத்தில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முக்கவசம் அணியவேண்டும் என்பது விதி.

viral video

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் மணப்பெண் ஒருவர் மணப்பெண் அலங்காரத்துடன் ஸ்கார்பியோ கார் பானெட்டில் அமர்ந்தபடி வலம்வர, போட்டோகிராபர் அந்த பெண்ணை வீடியோ எடுக்கிறார். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானநிலையில், மணப்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எந்தவிதமான கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் ஃபோட்டோஷூட் நடத்தப்பட்டதால், மணப்பெண், கார் ஓட்டுநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் போட்டோஷூட்-க்கு பயன்படுத்தப்பட்ட கேமராவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.