ஊரடங்கு நேரத்துல ட்யூசனுக்கா அனுப்புறிங்க..? பெற்றோரையும், டீச்சரையும் போலீசிடம் சிக்க வைத்த 5 வயது சிறுவன்..! எங்கு தெரியுமா?

ஊரடங்கை மதிக்காமல் தன்னை வலுக்கட்டாயமாக டியூசனுக்கு அனுப்பிய பெற்றோர் மீது 5 வயது சிறுவன் காவல் நிலையத்தில் புகாரளித்து, போலீசாரை வீட்டிற்கே கூட்டிவந்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பட்டாலா என்னும் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவனை அவரது பெற்றோர் ஊரடங்கு சமயத்தில் வலுக்கட்டாயமாக டியூசனுக்கு அனுப்பிவைத்துள்ளனர். தினமும் வேண்டா வெறுப்பாக டியூசனுக்கு சென்றுவந்த சிறுவன் ஒருகட்டத்தில் பொறுமையை இழந்துள்ளான்.
இந்நிலையில், டியூசனுக்கு சென்றுவரும் வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சென்று தனக்கு நடக்கும் கொடுமை பற்றி கூறியுள்ளான். சிறுவனை கையோடு அழைத்து வந்து முதலில் டியூசன் டீச்சரை போலீசார் கண்டித்துள்ளனர்.
பின்னர் சிறுவனின் வீட்டிற்கு சென்ற போலீசார் ஊரடங்கு சமயத்தில் இதுபோன்று நடந்துகொள்ளவேண்டாம் என சிறுவனின் பெற்றோரையும் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வைரலாகிவருகிறது.