தமிழகம் இந்தியா

படமெடுத்த போது சிலைபோல் மாறிய மூன்று கரு நாகங்கள்!! பார்க்கும்போதே மிரள வைக்கும் புகைப்படம்..

Summary:

படமெடுத்த போது சிலைபோல் மாறிய மூன்று கரு நாகங்கள்!! பார்க்கும்போதே மிரள வைக்கும் புகைப்படம்..

மூன்று கருநாக பாம்புகள் சிலைபோல் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதிலும் நாக பாம்பு என்றால் சற்று கூடுதல் பயம் நம்மை தொற்றிக்கொள்ளும். பல நேரங்களில் பாம்பை புகைப்படங்களில் பார்த்தால் கூட நம் மனதில் ஒரு பயம் ஏற்படுவதும் உண்டு. அதுபோன்ற பயத்தை ஏற்படுத்தும் புகைப்படம் ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைராலகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசாந்தா நந்தா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் மூன்று கருநாகங்கள் ஒன்றாக படம் எடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அமராவதி மாவட்டத்தில் உள்ள ஹரிசல் காட்டில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று கருநாகங்கள் ஒன்றாக பின்னிப்பிணைந்து படம் எடுத்து ஆடும் அந்த காட்சி பார்ப்போரை சற்று பயமுறுத்தத்தான் செய்கிறது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


Advertisement