பயங்கரவாதிகளின் வெறிச்செயல்! பா.ஜ.க. மாவட்ட தலைவர் உயிரிழப்பு!

BJP Worker Shot At in Budgam District


bjp-worker-shot-at-in-budgam-district

ஜம்மு காஷ்மீருக்கான தனி சிறப்புரிமை சட்டமான 370 பிரிவு கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநில வளர்ச்சிப் பணிகள் அனைத்து பகுதிகளிலும் சம சீராக நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் வளர்ச்சியை சகிக்க முடியாத சக்திகள் பாஜக ஆதரவாளர்களான முஸ்லிம்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், பாஜக ஜம்மு-காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் நேற்று ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை பாரதிய ஜனதா கட்சியின் தீவிர தொண்டரும், பாஜக மாவட்ட அளவிலான நிர்வாகியான அப்துல் ஹமீத் நஜார் வழக்கம்போல நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அப்துல் ஹமீத் நஜார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். கடந்த ஜூலை மதம்  பா.ஜ.க.வின் முன்னாள் பந்திபோரா தலைவர் வாசிம் பாரி, அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகிய 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு உயிரிழந்து விட்டனர்.