பொதுமக்கள் உயிரை மலிவாக எண்ணும் அமைச்சர் சேகர் பாபு? - அண்ணாமலை பாய்ச்சல்.!



BJP Annamalai Report on PK Sekar babu 19 March 2025 


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ஓம் குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார். அங்கு ரூ.100 கட்டண வரிசையில், சாமி தரிசனம் செய்ய காத்திருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவரின் மறைவு கோவில் பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருந்த ஓம் குமாரின் குடும்பத்தினர், அவசர ஊர்தி விரைந்து வரவில்லை. திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர்கள் அதிக பணம் கேட்கின்றனர். குடிக்க குடிநீர் இல்லை என பல விஷயங்களை பதிவு செய்திருந்தனர்.

பக்தரின் மரணம்

இதனிடையே, காவல்நிலைய எப்.ஐ.ஆரில், ஓம் குமாருக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்தாகவும், அதனால் உயிரிழந்ததாகவும் எழுதி கையெழுத்து வாங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும், அதனையே கூறி இருந்தார். இந்த விசயத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அண்ணாமலை தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ரௌடி வசூல் ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை; பட்டப்பகலில் பயங்கரம்.!

annamalai

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைப்பதிவில், "திருச்செந்தூர் கோவிலில், கூட்டநெரிசலால் உயிரிழந்த, காரைக்குடியைச் சேர்ந்த திரு. ஓம் குமார் அவர்களின் மனைவி எழுதியதாக, அமைச்சர் திரு. சேகர்பாபு கூறிய கடிதத்தைப் படித்துப் பார்த்தேன். அந்தக் கடிதத்தின் சில வரிகளை கோடிட்டுக் காட்டியுள்ளேன். இப்படி ஒரு கடிதம் கொடுத்தால் தான் இறந்தவரின் உடலைக் கொடுப்போம் என்ற வற்புறுத்தலின் பெயரில் எழுதப்பட்ட கடிதம் போல் உள்ளது.'

அமைச்சர் உணர வேண்டும்

மறைந்த திரு ஓம் குமாரின் குடும்பத்தார் மேலும், ஊடகத்தில், நேற்று அளித்த நேர்காணலைப் பார்த்தேன். கடிதத்தில் உள்ள விவரங்களுக்கும், அவர்கள் ஊடகத்தில் தெரிவித்ததற்கும் எத்தனை முரண்கள். தங்கள் ஆட்சியின் கையாலாகாத்தனத்தை மறைக்க, பொதுமக்கள் உயிரை மலிவாக எண்ணும் அமைச்சர் திரு சேகர் பாபு, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதை உணர்ந்தால் நன்று.

கூட்ட நெரிசலில் உயிரிழந்த திரு ஓம் குமார் அவர்களின் குடும்பத்தாருக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணமாக, தமிழக அரசு உடனடியாக, வழங்கவேண்டும் என்றும், இனியும் கோவில்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தீராத வயிற்று வலியால் இளம்பெண் விபரீத முடிவு.. 20 வயதில் நேர்ந்த சோகம்.!