#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
ரௌடி வசூல் ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை; பட்டப்பகலில் பயங்கரம்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காலிமேடு பகுதியில் வசித்து வருபவர் வசூல் ராஜா. கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல் என 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் இவரின் பெயரில் நிலுவையில் இருக்கின்றன.
உள்ளூரில் ரௌடியாக இருக்கிறார். சம்பவத்தன்று விஷ்ணுகாஞ்சிப்புரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், ரேஷன் கடை அருகில் நின்றுகொண்டு இருந்த ராஜா மீது, அவரை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி கொலை செய்தனர்.
ராஜாவின் வீட்டுக்கு அருகேயே இந்த சம்பவம் நடைபெற்றது. கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பழிக்குப்பழியாக ராஜா கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
இதையும் படிங்க: தீராத வயிற்று வலியால் இளம்பெண் விபரீத முடிவு.. 20 வயதில் நேர்ந்த சோகம்.!
வழக்கில் கைதாகி சமீபத்தில் பிணையில் வெளியே வந்த ராஜா, கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: பிஎம் ஸ்ரீ திட்டம்.. ரூ.5000 கோடி இழப்பு.. மத்திய அமைச்சர் போட்டுடைத்த உண்மை.. தமிழ்நாட்டுக்கு ஷாக்.!