ஐயோ... ஒரு நொடியில் உயிர் தப்பினாரா? நடிகர் கிரண் ராஜை கீழே தள்ளிய சிங்கம்! அதிர்ச்சி வீடியோ..!!!
ஊர் ஊராக பிச்சைக்கார வேடத்தில் பிச்சை எடுத்து திரிந்த பெற்றோர்! அதிரவைக்கும் பின்னணி காரணம்.... இறுதியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!!
பீகாரைச் சேர்ந்த தம்பதியின் 14 மற்றும் 11 வயது மகன்கள் குஜராத்தின் முண்ட்ரா பகுதியில் இருந்து காணாமல் போன நிலையில், பல மாத தேடலுக்குப் பிறகு இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகளைத் தேடி பெற்றோர் பல மாநிலங்களில் அலைந்தனர். இறுதியில் ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தில் இருவரையும் பாதுகாப்பாக கண்டுபிடித்தனர்.
விளையாடச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை
வேலைக்காக குஜராத்தின் முண்ட்ரா பகுதிக்கு வந்திருந்த தம்பதியினர், தங்களது இரு மகன்களுடன் அங்கு வசித்து வந்தனர். கடந்த ஜனவரி 15-ம் தேதி விளையாடச் சென்ற சிறுவர்கள் இருவரும் அதன்பின் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம், உறவினர்கள் என பல இடங்களில் தேடிய பெற்றோர், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். ஆனால் குழந்தைகள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணிக்கு நடந்த அதிர்ச்சி! 50 மீட்டர் தூரம் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பயங்கரம்.... பகீர் வீடியோ!!!
பிச்சைக்காரர்கள் போல வேடமிட்டு பல மாநிலங்களில் தேடல்
மூன்று மாதங்கள் கடந்தும் மகன்கள் கிடைக்காததால், அவர்கள் பிச்சை எடுக்கும் கும்பலிடம் சிக்கியிருக்கலாம் என பெற்றோர் சந்தேகித்தனர். இதையடுத்து, வேலை மற்றும் வாழ்வாதாரத்தை ஒதுக்கிவிட்டு காணாமல் போன சிறுவர்கள் இருவரையும் தேடும் முயற்சியில் இறங்கினர். பிச்சைக்காரர்கள் போல வேடமணிந்து குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தெருத்தெருவாகச் சென்று தகவல் சேகரித்தனர்.
ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் இரு மகன்களும் மீட்பு
பல மாத தேடலுக்குப் பிறகு, மூத்த மகன் பிச்சைக்கார கும்பலுடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராஜஸ்தானின் பிகானேர் பகுதிக்குச் சென்ற பெற்றோர், மகனை கண்டுபிடித்தனர். அதன்பின்னரும் இளைய மகனுக்கான தேடல் தொடர்ந்தது. சுமார் 15 நாட்களுக்குள் மேற்கு வங்கத்தின் ஹவுரா பகுதியில் அவனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டான். பல தடைகளைத் தாண்டி பெற்றோர் தங்கள் இரு மகன்களையும் மீண்டும் அழைத்து வந்தது, குழந்தைகள் மீட்பு நடவடிக்கையில் அவர்களின் விடாமுயற்சியை வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு ரீல்ஸ் வீடியோவுக்காகவா இப்படி? சொந்த மகளையே கொடூரமாக தாக்கி நாடகமாடிய தந்தை! இறுதியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை...!!!