"பேரன்பேத்தி எடுக்கும் வயதில் இதெல்லாம் தேவையா?".. கணவரை விட்டு, 5 குழந்தைகளுடன் ஓட்டம் பிடித்த தாய்.. கள்ளக்காதலன் மீது புகார்.!

பீகார் மாநிலத்தில் உள்ள கைமுர் மாவட்டம், பக்வன்பூர் பகுதியை சேர்ந்த பெண்மணிக்கு திருமணம் முடிந்து கணவர், 6 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த வருகின்றனர்.
தம்பதியின் 6 குழந்தைகளில் மூத்த பெண் பிள்ளைக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், 6 குழந்தைகளின் தாய் அவ்வப்போது செல்போனில் ஆண் ஒருவருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் தனது ஆண் நண்பருடன் பிற 5 குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஓட்டம் பிடித்ததாக தெரியவருகிறது. இதனால் மனமுடைந்துபோன கணவர், தனது மனைவியை கண்டறிந்துதரக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அழைப்பு தொடர்ந்து சென்றாலும், அதனை ஏற்று யாரும் பதில் அளிக்கவில்லை.