அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அவ்வளவு வலி! BE படிப்பை பாதியில் நிறுத்திய 34 வயது இளைஞர்! வேலை இல்ல! திடீரென மாலில் இருந்து குதித்து.... உயிரை மாய்துக்கொண்ட அதிர்ச்சி!
நவீன நகர வாழ்வில் மனநலத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிற நிலையிலும், இளைஞர்களின் உணர்ச்சி தளர்ச்சியை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகி வருவதாக நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் நடந்த துயர சம்பவம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த சாஹர் (34) என்ற இளைஞர், திடீர் தற்கொலை என சந்தேகிக்கப்படும் வகையில் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
மனநல சிக்கல்கள் மற்றும் வேலைவாய்ப்பு தட்டுப்பாடு
என்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்திய சாஹர், நீண்ட காலமாக வேலைவாய்ப்பு கிடைக்காததால் மனஅழுத்தத்துக்கு ஆளாகி, மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த காலை அவர் வழக்கம்போல் அந்த மாலுக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அய்யோ... சாவின் விளிம்புக்கு சென்று திரும்பியவர்கள்! பூங்காவில் ராட்டினம் உடைந்து விழுந்து 23 பேர் படுகாயம்! அலறி ஓடிய மக்கள்! பகீர் வீடியோ!
சம்பவ இடத்திலேயே பலி – போலீஸ் விசாரணை தீவிரம்
மூன்றாவது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்த சாஹர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, இந்த முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வணிக வளாகத்தில் பதட்ட நிலை
சம்பவம் நடந்த போது அங்கு இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து அவசரமாக வெளியேறியதால் ஒரு கட்டத்தில் பரபரப்பு நிலவும் சூழல் உருவாகியது.
இத்தகைய சம்பவங்கள் சமூக ரீதியாக மனநல கவணிப்பின் அவசியத்தை மீண்டும் உணர்த்துவதோடு, மனஅழுத்தத்தில் தவிக்கும் இளைஞர்களுக்கு உடனடி உதவி மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.