மாமனாருக்கு மசாஜ்! மனைவியை மற்றவர்களுக்கு விருந்தாக்க நினைத்த கணவன்! வெளிவந்த பகீர் தகவல்...

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் வசித்து வரும் யுனிஸ் பாஷா என்ற நபர், 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்தார். திருமணத்தின் சில மாதங்களுக்குள் வரதட்சணை கோரியதற்காக தனது மனைவியை மற்றும் அவரது பெற்றோரை அவர் தொடர்ச்சியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
கருக்கலைப்பு மற்றும் கொடுமைகள்
திருமணத்திற்குப் பிறகு அந்த பெண் கர்ப்பமாக இருந்த நிலையில், யுனிஸ் பாஷா தனது மனைவிக்கு இரு முறை கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இத்துடன், மாமனாருக்கு மசாஜ் செய்ய வேண்டும் என அடித்துத் தவறான முறையில் கொடுமை செய்த சம்பவமும் தெரியவந்துள்ளது.
அவர் பண தேவைப்பட்ட போதெல்லாம் மனைவியை அடித்து தாக்குவது வழக்கமாக இருந்ததோடு, தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமென மனைவியை வற்புறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்கூட்டியில் சென்ற மாணவிகள்! நடுரோட்டில் கன்னத்தில் ஓங்கி அறைந்து ஆக்ரோஷமாக பேசிய போக்குவரத்து காவலர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...
இந்த வற்புறுத்தல்களை மனைவி எதிர்த்து நின்றதால், 5 முறை முத்தலாக் சொன்னதாகவும், பின்னர் தன் மனைவி வீட்டிற்கு திரும்பிய போது துப்பாக்கியால் மிரட்டிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
போலீசார் நடவடிக்கை
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். விசாரணையின் போது, யுனிஸ் பாஷாவுக்கு ரவுடிகள் மற்றும் அரசியல் தொடர்புகள் இருப்பதும், மனைவியை மற்றவர்களுக்கு விருந்தாக்க நினைத்ததும் தெரியவந்தது. தற்போது கணவர், மாமனார், மாமியார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 11 வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்ட பயங்கரம்.! தந்தையின் கண்ணீரால் நனைந்த சாலை! சோகத்தில் முடிந்த திருமண ஊர்வலம்!