இந்தியா

நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு! யார் இந்த பவன் ஜல்லாட்! அவருக்கு சம்பளம் இவ்வளவா?

Summary:

Bavan jallath is a hanger in nirpaya issue

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த தீர்ப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் ஏழு வருடத்திற்கு பிறகு இன்று அதிகாலை 5.30 மணியளவில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 

இதற்கிடையே 4 பேரையும் தூக்கிலிடும் பணிக்கும் உத்திரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த பவன் ஜல்லாட் என்ற  ஊழியரை திகார் சிறை நிர்வாகம் தேர்வு செய்திருந்தது. அவர் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.  அதனைத்தொடர்ந்து இன்று 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட 8 கயிறுகளை பவனிடம் கொடுத்த நிலையில் அவர் 4 நான்கு கயிறு மட்டும் தேர்வு செய்து பின் அதனை ஒத்திகைப் பார்த்து, சரியாக 5.30 மணியளவில் நான்கு குற்றவாளிகளையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட்டார்.

4 குற்றவாளிகளையும் தூக்கில் ஏற்றிய பவனுக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.80.000 ஆயிரம் ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பவன்  கூறுகையில்,  இதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன். கடவுளுக்கும், திகார் சிறைக்கும்  மிக்க நன்றி என கூறியுள்ளார்.


Advertisement