சாமியாரின் பேச்சை நம்பி உயிரை விட்ட வங்கி ஊழியர்! என்ன நடந்தது தெரியுமா?

Bank employee dies who tried to hunt treasure in forest


bank-employee-dies-who-tried-to-hunt-treasure-in-forest

சாமியார் ஒருவரின் பேச்சை கேட்டு காட்டிற்குள் புதையல் தேடி சென்ற ஒருவர் சோறு, தண்ணி இல்லாமல் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் காசாளராக வேலைபார்த்து வந்துள்ளார் சிவகுமார்.

போலி சாமியாரின் போஜனை:
இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் போலி சாமியார் ஒருவரின் பழக்கம் கிடைத்துள்ளது. அந்த சாமியார் சிவகுமாரிடம் குறிப்பிட்ட காட்டு பகுதியில் மன்னர் காலத்து தங்க புதையல் இருப்பதாக கூறியுள்ளார். சாமியார் கூறியதை நம்பி சிவகுமார் அந்த சாமியாரை அழைத்துக்கொண்டு தனது நண்பர் குடும்பம் மற்றும் தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு காட்டிற்குள் சென்றுள்ளனர்.

tamil news

கிடைக்காத புதையல்:
இந்நிலையில் இரண்டு நாட்களாக புதையலை தேடியும் அவர்களுக்கு எந்த புதையல் கிடைக்கவில்லை. மாறாக சோறு, தண்ணி இல்லாமல் சோர்ந்துபோன இவர்கள் தனி தனியாக புதையலை தேடி காட்டிற்குள் பிரிந்து சென்றுள்ளனர். ஒருவழியாக சிவகுமாரின் நண்பர் அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். மேலும் நிலையாமை புரிந்துகொண்ட அவர் குடும்பத்தினருக்கு போன் செய்து அனைத்தையும் கூறியுள்ளார்.

சிவகுமாரின் கதி என்ன?
இதனை தொடர்ந்து புதையலை தேடி சென்ற சிவகுமார் என்ன ஆனார்? எங்கே உள்ளார் என எதுவும் தெரியாத நிலையில் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டு சிவகுமாரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இரண்டு நாள் தேடலுக்கு பிறகு சிவகுமார் சோறு, தண்ணி இல்லாமல் வெயிலின் கொடுமையால் மரணமடைந்து சடலமாக மீட்கப்பட்டார்.

tamil news

மேலும், இந்த சம்பவத்துக்கு காரணமான சாமியாரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சாமியாரின் பேச்சை கேட்டு சிவகுமார் உயிர் இழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.