வேலைக்கேற்ற கூலி வேண்டும்; ரூபாய் 10 க்காக 12 லட்சம் சேதம்; ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்.!bangalur---hotel---swikky-boys---12laks-loss

ஹோட்டலில் இருந்து உணவு டெலிவரி செய்ததற்காக கொடுக்கப்பட்ட கமிஷன் தொகை ரூபாய் 10 குறைந்ததால் ஸ்விக்கி பாய்ஸ் அனைவரும் சேர்ந்து ஹோட்டலை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு, பன்னாரகட்டா சாலையில் இயங்கி வரும் எம்பயர் ரெஸ்டாரண்ட்டில் 
இருந்து வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக ஸ்விக்கி டெலிவரி பாய் நதீம் என்பவருக்கு ரூ. 40 கமிஷன் கொடுப்பதாக அங்கு பணிபுரிந்து வரும் பாரூக் என்பவர் கூறியிருக்கிறார்.

bangalore 

ஆனால் வாடிக்கையாளரிடமிருந்து நல்ல பதில் வந்தால் தான் ரூ. 40 கொடுக்க முடியும் என கூறி ரூ.10 குறைத்து ரூ.30 கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பிறகு கை கலப்பாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓட்டல் ஊழியர்கள் சிலர் சேர்ந்து நதீமை தாக்கியுள்ளனர்.

இதனால், நதீம் நான் கமிஷன் தொகை கேட்டதற்காக என்னை தாக்கி விட்டார்கள் என்று மற்ற ஸ்விக்கி பாய்ஸ்களிடம் கூறியுள்ளார். இதனால் ஹோட்டல் முன் குவிந்த பல தொழிலாளர்கள் ஹோட்டல் ஜன்னல்கள், கண்ணாடிகளை உடைந்து நொறுக்கி உள்ளார்கள். இதனால் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக ஓட்டல் நிர்வாக தெரிவித்துள்ளது.

bangalore

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட ஸ்விக்கி பாய்ஸ் 24 பேரை கைது செய்தனர். இதுகுறித்து பேசிய பெங்களூரு துணை கமிஷனர் போரிலிங்கையா, ஓட்டல் ஊழியர்கள் 7 பேரையும், ஸ்விக்கி ஊழியர்கள் 24 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் யார் மீதும் கிரிமினல் வழக்கு இல்லை. விசாரணை நடந்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.