4 கை,கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை..! மருத்துவர்கள் சொன்ன விசித்திர காரணம்.!



baby-born-with-four-hands-and-four-legs

மத்தியப் பிரதேசத்தின் லவ் குஷ் நகரில் 29 வயது பெண் ஒருவர் நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிசய பிறப்பு :

லவ் குஷ் நகரில் பிறந்த இந்த குழந்தைக்கு வழக்கமான 2 கைகள் மற்றும் 2 கால்களுடன், கூடுதலாக 2 கைகள் மற்றும் 2 கால்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அரிய பிறப்பு மருத்துவ ரீதியாக Parasitic twinning என அழைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆக்சிஜன் டியூப் வெடித்து சோகம்.. பெண் பரிதாப பலி.!  

என்ன காரணம் :

பொதுவாக இரட்டைக் குழந்தைகளாக வளர வேண்டிய கருக்கள், முழுமையாக தனித்தனியாக வளர்ச்சி பெறாமல் ஒன்றுடன் ஒன்று இணைந்த நிலையில் வளரும்போது இதுபோன்ற நிலை ஏற்படலாம். இதில் ஒரு கரு முழுமையாக வளர்ச்சியடையாமல், மற்றொரு குழந்தையின் உடலுடன் இணைந்த நிலையில் பிறப்பதே இதற்கான முக்கிய காரணம் என மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

ParasiticTwinning

Parasitic twinning :

Parasitic twinning என்பது மிகவும் அரிதாகக் காணப்படும் ஒரு மருத்துவ நிலை. இதில் முழுமையாக வளர்ச்சி பெறாத ஒரு இரட்டைக் கருவின் சில உடல் பாகங்கள், மற்றொரு குழந்தையின் உடலுடன் இணைந்திருக்கும். இதனால் குழந்தைக்கு கூடுதல் கைகள் அல்லது கால்கள் போன்ற உறுப்புகள் தோன்றலாம்.

மேல் சிகிச்சை :

தற்போது இந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்து தேவையான மேல் சிகிச்சை அளிப்பதற்காக ஜபல்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 4 கைகள் மற்றும் 4 கால்களுடன் பிறந்த இந்த குழந்தையின் சம்பவம் உலக அளவில் மருத்துவ துறையில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஒரே இரவில் மொத்த குடும்பமும் காலி! மொட்டை மாடி, படிக்கட்டுகள், கட்டுலுக்கு அடியில் கிடந்த உடல்கள்... மிரண்டு போன போலீஸ்! ஓய்வுபெற்ற ஆசிரியர் குடும்பத்தில் நடந்தது என்ன? பகீர் சம்பவம்!!!