பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு.! தமிழகம் முழுவதும் குவிக்கப்பட்ட போலீஸ்.!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு.! தமிழகம் முழுவதும் குவிக்கப்பட்ட போலீஸ்.!


Babri Masjid demolition case judgement

அயோத்தியில் 1992 ஆம் ‌ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் ‌பாரதிய ஜனதா மூத்த‌ தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மு‌ன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி, முன்னாள் உ‌த்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்பட49 பேர் மீது குற்றம் சாட்டி சிபிஐ போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

அதில் 17 பேர் இறந்து விட்டதால், தற்போது 32 பேர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

court

மொத்தமாக 351 சாட்சியங்கள், ஆதாரங்களாக 600 ஆவணங்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருந்தது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று வெளியாகும் தீர்ப்பை ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் முக்கியமான இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.